×

மக்கள் குறை தீர்க்கும் நாள் கோரிக்கையை ஏற்றுமாற்றுத்திறனாளிக்கு உடனடி 3 சக்கர சைக்கிள்

நெல்லை, ஏப். 18: நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதிர் கன்னி உதவித்தொகை, விபத்துமரண உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மற்றும் பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, மற்றும் குடிநீர், சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 423 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் ஒப்படைத்து மனுக்களை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் கார்த்திகேயன் அறிவுறுத்தினார்.

மேலும், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளிகளை இருக்கையில் அமரவைத்து அவர்களது இருக்கைக்கு சென்று கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மாற்றுத்திறனாளி மூன்று சக்கர சைக்கிள் வழங்குமாறு கோரிக்கை வைத்ததை ஏற்று உடனடியாக வழங்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை கலெக்டர் குமாரதாஸ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பென்னட் ஆசிர் மற்றும் அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post மக்கள் குறை தீர்க்கும் நாள் கோரிக்கையை ஏற்று
மாற்றுத்திறனாளிக்கு உடனடி 3 சக்கர சைக்கிள்
appeared first on Dinakaran.

Tags : Paddy ,Paddy Collector's Office ,Dr. ,Karthigayan ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அருகே 5 ஆயிரம்...